Home செய்திகள் சாமானிய மக்களும் மருத்துவம் படித்து சாதனைகள் பல படைக்கலாம்: டாக்டர் ஏகலவைன்..

சாமானிய மக்களும் மருத்துவம் படித்து சாதனைகள் பல படைக்கலாம்: டாக்டர் ஏகலவைன்..

by Abubakker Sithik

“சாமானிய மக்களும் மருத்துவம் படிக்கலாம், சாதாரணமானவரும் சரித்திரம் படைக்கலாம்”; டாக்டர் ஏகலவைன் கூறும் தகவல்.

“தைமூர் நாட்டில் சாமான்யரும் மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளதாகவும், மருத்துவ துறைகளில் சாதனைகள் பல படைத்து உயர முடியும் எனவும் டாக்டர் ஏகலைவன் தெரிவித்துள்ளார். தைமூர் நாட்டின் மரூத்துவ கல்வி விவரங்களை டாக்டர் ஏகலைவன் விவரித்துள்ளதாவது; இந்தியாவில் நீட் மதிப்பெண்கள், மிகப்பெரிய நன்கொடை என பல்வேறு காரணங்களால் மருத்துவராகும் கனவு பலருக்கு துளிரிலேயே பட்டுப்போகும் நிலை காணப்படுகிறது. மிகச் சாமான்ய குடும்பத்திலிருந்தும் மருத்துவர் உருவாகலாம், மருத்துவக் கனவு நனவாகலாம் என்ற நூறு சதவீத உத்திரவாதத்தை தைமூர் (TIMOR) மருத்துவக் கல்வி நம்பிக்கை தருகிறது.

நன்கொடை ஏதுமில்லா ஐந்தரை வருட மருத்துவ படிப்பு. இரண்டரை லட்சம் மட்டுமே வருடாந்திர கல்விக் கட்டணம். ஆங்கில வழிக் கல்வியுடன் நமது கலாச்சாரம் போலவே ஆண், பெண்ணுக்கு தனித்தனி விடுதி வசதிகள். இந்திய உணவு இங்கு கிடைக்கிறது. தைமூர் தட்பவெப்ப நிலை நமது நாட்டைப் போலவே இருப்பதால் இங்கிருந்து படிக்கச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு ஏதுவானதாக இருக்கிறது. மற்ற நாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவர்கள் அந்தந்த நாடுகளின் மொழியையும் படிக்கும் நிலை தைமூர் நாட்டின் யுனிவர்சிட்டியில் இல்லை.

(உன்பாஸ்) (UNPAZ) எனப்படும் பல்கலைக்கலையின் இந்திய இயக்குனராக ஐஸ்லின் பாஸ்கர் திகழ்கிறார். இவர் இந்தியர், குறிப்பாகத் தமிழர். இந்த பல்கலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐசக் பாஸ்கர் ஒரு தமிழர். ஏலகிரியில் வாழ்கிறார். வெளிநாட்டு மருத்துவ கல்லூரி படிப்பின் ஆழம் தெரிந்தவர். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று தைமூர் மருத்துவ கல்வி பற்றி பேசி வருகிறார். கல்வி உதவித்தொகை பெற இங்கு வழிகாட்டுதல் தரப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) இந்த மருத்துவ படிப்பை அங்கீகரித்துள்ளது. 500 படுக்கை வசதிகள் கொண்ட “உன் பாஸ்” பல்கலையில் பயில தமிழகத்தின் தென் பகுதியில் மருத்துவர் ஏகலைவன் மாணவ மாணவிகளை தேடிச் சென்று வழி காட்டி வருகிறார்.

இந்தியாவைப் போல AIIMS Syllabus தைமூரிலும் என்பது நம்மவர்களுக்கு சிறப்பானது. கல்வி முறை, மொழி, கல்வி கட்டணம், வங்கி கடன், சாப்பாடு, விடுதி வசதி, விமானப்பயணம், விசா, உலக தரத்தில் மருத்துவ பட்டம், பயிற்சி, பட்டப்பதிவு, காலநிலை போன்ற கூடுதல் விவரங்கள் பெற முக்கூடல் பல் மருத்துவர் டாக்டர் ஏகலைவன், 8012365655 எண்ணில் அழைக்கலாம். “சாமான்யரும் மருத்துவம் படிக்கலாம், சாதாரணமானவரும் சரித்திரம் படைக்கலாம்” என்பதே தைமூர் மருத்துவ படிப்பு நம் எல்லோருக்கும் சொல்கிறது என்கிறார் டாக்டர் ஏகலைவன்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!