Home செய்திகள் பழைய குற்றாலம் மலைப்பகுதிகளில் கொளுந்து விட்டு எரியும் காட்டு தீ – வன விலங்குகள் உயிரிழப்பு..

பழைய குற்றாலம் மலைப்பகுதிகளில் கொளுந்து விட்டு எரியும் காட்டு தீ – வன விலங்குகள் உயிரிழப்பு..

by ஆசிரியர்

நெல்லை மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் பல்வேறு அரியவகை மூலிகைகள் உள்ளன. குற்றால அருவிகளில் குளிப்பது பல நோய்களுக்கு நிவாரணம் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மலையில் மூலிகைகள் நிறைந்த பகுதி வழியே தண்ணீர் ஓடுவதே ஆகும்.

அரிய பல மூலிகைகள் கலந்து தண்ணீர் அருவிகளில் விழுவதால் அது மருந்தாகவும்,நோய் நிவாரணியாகவும் திகழ்கிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கத்தினால் அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. மேலும் அக்னி நட்சத்திரம் வெயில் துவங்கி விட்டது.  தென்மேற்கு பருவ காற்று வீசத் துவங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இப்பகுதியில் தெரிவதில்லை.

குற்றாலம் மலைப்பகுதியில் வெயிலின் தாக்கத்தினால் மரம், செடி, கொடிகள், மூலிகை செடிகள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று பழையகுற்றாலம் மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் அரியவகை பல மூலிகைகள் எரிந்து சாம்பலானது. மேலும் வன விலங்குகள் பல உயிரிழந்தன.

தென்மேற்கு பருவக்காற்று தற்போது வீசி வருவதால் காட்டுத் தீ மலையின் உச்சி பகுதி வரை வேகமாக பரவியது. இந்த காட்டு தீ காரணமாக அரியவகை மூலிகைகள், பல்வேறு வகையான காட்டு மரங்கள், வனவிலங்குகள் எரிந்து சாம்பலாகி வருகிறது.

மேலும் காட்டுத் தீயில் சிக்கிய மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பல தப்பிக்க முடியாமல் உயிரிழந்தன. இரவு நேரத்தில் மலைப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிவதை காண முடிந்தது.

குற்றாலம் மலைப்பகுதியில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com