Home செய்திகள் நஷ்ட ஈடு கோரி கருகி கதிர்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயிகள்..

நஷ்ட ஈடு கோரி கருகி கதிர்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயிகள்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் ஓரிவயல், பனைக்குளம், வேடந்தை, கள்ளு பெருக்கி உள்ளிட்ட கிராமங்களில் 300 எக்டர் நன் செய், 560 எக்டர் புன் செய் பயிர்கள் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. போதிய மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகின.

இதனால் 100 சதவீத விவசாயம் பாதிப்படைந்துள்ளதாக கோரி தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக்கோரி 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்ந்த நெற்கதிர்களுடன் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு அளித்தனர். விவசாயிகள் கூறுகையில், நடப்பு பருவமழை பொய்த்ததால் ஆயிரம் எக்டர் நிலத்தில் சாகுபடி செய்த பயிர்கள் முற்றிலும் கருகிவிட்டது. சாகுபடி பாதித்த இடங்களை வருவாய் துறை அதிகாரிகள் சேட்டிலைட் மூலம் கணக்கெடுத்தனர். விவசாயம் பாதித்த இடங்களை முறையாக பார்வையிடாமல் ஒரு சில இடங்களில் மட்டுமே பார்வையிட்டு சென்றுள்ளனர். |பாதிக்கப்பட்ட இடங்களை முறையாக மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அனைவருக்கும் உரிய நஷ்ட ஈடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com