மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சேடப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் உருவாக்கிய அறிவியல் சாதனங்கள் அறிவியல் தொடர்பான ரங்கோலிகள் உள்ளிட்ட கண்காட்சி நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் செந்தில் வேல் துணை தலைமை ஆசிரியர் பாண்டி விமலா ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் தாங்கள் கண்டுபிடித்த அறிவியல் சாதனங்களை கண்காட்சியாக வைத்தனர். மேலும் அறிவியல் சார்ந்த ரங்கோலி கோலங்கள் வரைந்து மாணவியர்கள் அசத்தினார்கள். இந்த கண்காட்சியில் 255 அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் பூகம்பம் எச்சரிக்கை கருவி ராக்கெட் ஏவுகணை தளம் தொழிற்சாலையில் ஏற்படும் நச்சுப்பகை வெளியேறுவதை எச்சரிக்கை செய்யும் கருவி ஊராட்சிகளில் மேல்நிலைத் தேக்க தொட்டியில் கொள்ளளவு நிரம்பி நீர் வீணாகும் முன் எச்சரிக்கை செய்யும் கருவி மனிதனின் முதுகுத்தண்டு வடம் இதயும் சிறுநீர் உள்ளிட்ட மனித உறுப்புகள் செயல்படும் விதம் போன்றவற்றை மாணவ மாணவிகள் காட்சி பொருளாக வைத்திருந்தனர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
48
You must be logged in to post a comment.