Home செய்திகள் நிலக்ககோட்டை ஒன்றியத்தில் 71 இடத்தில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா..

நிலக்ககோட்டை ஒன்றியத்தில் 71 இடத்தில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா..

by ஆசிரியர்

நிலக்கோட்டை ஒன்றியத்தில் 71 இடத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நிலக்கோட்டை பிப்ரவரி 25 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்திலுள்ள மைக்கேல் பாளையம், காமலாபுரம் ,கொடைரோடு, அம்மையநாயக்கனூர், பள்ளபட்டி ,அணைப்பட்டி, விளாம்பட்டி , நிலக்கோட்டை, கோடாங்கிநாயக்கன்பட்டி, தோப்புப்பட்டி, உள்ளிட்ட சுமார் 76 இடங்களில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கியும் ,பொதுக்கூட்டம் அதிமுக செயலாளர் யாகப்பன் தல தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர் வரவேற்று பேசினார். முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனிவாசன் , நிலக்கோட்டை வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்க தலைவர் நாகராஜன் அவர்கள் முன்னிலை வகித்தனர் . கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது: இன்றைக்கு உலகமெங்கும் அதிமுகவினரும்’ பொதுமக்களும் கொண்டாடக்கூடிய ஒரு விழாவாக எங்களது கழக பொதுச்செயலாளர் அம்மாவின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர. அதுமட்டுமல்ல பொதுமக்களுக்கு அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் கட்சி உறுப்பினர்கள் உள்பட அனைவரும் நலத்திட்டங்கள் வழங்க மறைந்த எங்களது முன்னாள் முதல்வரும் பொதுச்செயலாளர் அம்மா அவர்களின் உத்தரவுப்படி இன்றுவரை நடைமுறைப்படுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி வருகிறோம் அதிமுக கட்சியின் கடைசி தமிழன் இருக்கும் வரை இந்த நலத்திட்டங்கள் தொடரும் என பேசினார்.

இவ்விழாவில் ஓன்றிய துணை செயலாளர் நல்ல தம்பி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் முனியப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை அருகே உள்ள திரவியம் நகர் லில்லியம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுமார் 200 பேருக்கு நிலக்கோட்டை அதிமுக ஒன்றிய மற்றும் பேரூர் கழகம் சார்பாக அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோன்று நிலக்கோட்டை ஒன்றியத்தில் சுமார் 70 இடங்களில் கட்சிக் கொடியேற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திருவுருவ ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com