58
கீழக்கரையை ஒட்டியருப்பது தில்லையேந்தல் பஞ்சாயத்து, இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ப்ளாஸ்டிக் பொருட்கள் கலந்த கழிவுகளை பள்ளி மற்றும் கல்லூரி அருகிலேயே திறந்த வெளியில் எரித்து வருகிறார்கள்.
இது சம்பந்தமாக கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக சில வருடங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்த பொழுது, ஆட்கள் பற்றாகுறை என்ற காரணம் கூறப்பட்டது. தற்போது தேவையான பணியாட்கள் வந்த பின்பும் இதே நிலைதான் தொடர்கிறது. இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்களும், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாக நேரிடும். ஆகவே தில்லையேந்தல் பஞ்சாயத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
You must be logged in to post a comment.