
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 15.02.18 அன்று CIICP-111 மற்றும் ரடீசியா ஆகிவைகளின் சார்பாக CLUSTER OF INDUSTRIES என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் கருத்தரங்கமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பயிலக முதல்வர் டாக்டர் அ. அலாவூதின் தலைமையேற்று பேசுகையில் தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களை கூறி எவ்வாறு தொழில் முனைவோராக உருவாவது என்பது பற்றி மாணவர்களுக்கு கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் RDO திருமதி பேபி கலந்து கொண்டு கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்கள். இராமநாதபுரம் மாவட்டம் ரடீசியா தலைவர் VRC பாண்டியன் மற்றும் திருநெல்வேலி MSME உதவி இயக்குநர் கோவிந்தராஜ், TNPCB பொறியாளர் லிவிங்ஸ்டன், மற்றும் IOB மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அமர்நாத் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 200 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ரடீசியா அமைப்பைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னதாக நாகராஜன் வரவேற்றுபேசினார், கோவிந்தன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியினை இளமுருகு தொகுத்து வழங்கினார்.
You must be logged in to post a comment.