Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பாஜக அதிமுகவிற்கு வாக்களித்தால் நாடு சுடுகாடு ஆகிவிடும் – கனிமொழி பேச்சு..

பாஜக அதிமுகவிற்கு வாக்களித்தால் நாடு சுடுகாடு ஆகிவிடும் – கனிமொழி பேச்சு..

by ஆசிரியர்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கோவில்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவில்பட்டி அன்னை தெரசா நகரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அவர், மந்தித்தோப்பு, மேலப்பாண்டவர் மங்கலம், கீழப்பாண்டவர் மங்கலம், கரிசல்குளம், சிவந்திபட்டி, துறையூர், கோவில்பட்டி ராஜிவ் நகர், முத்துநகர், வடக்கு திட்டங்குளம், லாயல்மில் காலனி, தாமஸ் நகர், கூசாலிபட்டி, லிங்கம்பட்டி, குலசேகரபுரம் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறேன். கடந்த ஐந்தாண்டுகளாக மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜா.வால் எல்லாம் எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பது அனைவரும் தெரிந்தது. ஜி.எஸ்.டி. என்ற வரியை பல குழப்பங்கள் வந்து கடலைமிட்டாய் தொழில் உட்பட எல்லா தொழில் நசிந்து போக கூடிய அளவிற்கு ஒரு பாதிப்பை உருவாக்கி இருக்கின்றனர்.

சிறிய வியாபாரிகள் பெரியளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பட்டாசு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எந்த விதமான புதிய வேலைவாய்ப்புக்கும் இங்கே வழி இல்லாத ஒரு நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 100 நாள் வேலை என்ற திட்டத்தின் கீழ் 100 நாளைக்கு கூட நமக்கு வேலை கிடைக்காத ஒரு நிலை. அந்த சம்பளம் கூட வங்கி கணக்குகளை சரியாக வரவு வைக்காத ஒரு மிக மோசமான நிலையை நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். நியாயத்துக்காக யார் போராடினாலும், அவர்களை எதிர்த்து துப்பாக்கி சூடு நடத்தக்கூட தயங்காத ஒரு ஆட்சி இங்கே நடந்து கொண்டிருக்கிற அதிமுக ஆட்சி. பா.ஜ. என்ன சொல்கிறதோ அதனை இங்கே அதிமுக ஆட்சி செய்கிறது. வரும் தேர்தலில் இந்த இரண்டு ஆட்சிக்கும் நாம் முடிவு கட்ட வேண்டும். மறுபடியும் இந்தியாவில் தமிழர்களை மதிக்க கூடிய அரசாங்கம், நமது உணர்வுகளை மதிக்கக்கூடிய அரசாங்கம் மத்தியில் அமைய வேண்டும். பாஜக மதத்தின் பெயரை சொல்லி நம்மிடையே பிரச்சினை உருவாக்கக்கூடிய அரசியலைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்,நீட் தேர்வு கொண்டு வந்து நமது குழந்தைகள் மருத்துவராக முடியாத நிலையை உருவாக்கி உள்ளார்கள், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் அதிமுக அரசுக்கு பின்னால் நின்று கொண்டு 13 பேரை சுட்டு கொள்ளும் நிலையை உருவாக்கி உள்ளனர்,மத்தியில் இருக்கும் பாஜக மற்றும் தமிழகத்தில் இருக்கும் அதிமுக ஆட்சிகளால் யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை,கல்விக் கடன் கட்ட முடியாதவர்களை வங்கிகள் துரத்தித் துரத்தி பிடித்துக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலை உள்ளது. விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு என்று உருவாக்கப்பட்ட சுய உதவி குழுக்கள் செயல்படவில்லை, இந்த நிலையில் இவர்களுக்கு வாக்களித்தால் நாடு சுடுகாடு ஆகிவிடும் சூழ்நிலை உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.திமுக தேர்தல் அறிக்கையில், விவசாய கடன்கள் ரத்து செய்து தருவோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்வோம்.கிராமப்புறங்களில் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சுய தொழில் தொடங்குவதற்காக ரூ.50 ஆயிரம் வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்.10-வது படித்த ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலைப்பணியாளர் வேலை தரப்படும். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் செய்து தர எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்

அவருடன், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், பாண்டியன், ராதாகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜகுரு, மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ராமனுஜம் கணேஷ், குமார், அண்ணாத்துரை, மதிமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு, துணை செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!