இந்த பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கு அஞ்சாது. இந்த பனங்காட்டுக்காரி தான் இந்த மண்ணின் சொந்தக்காரி – தமிழிசை சௌந்திரராஜன் ..

கோவில்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி காரியாலயம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் தமிழக பா.ஜ.க மாநில தலைவரும்  தூத்துக்குடி நாடளுமன்ற தொகுபா.ஜ.க வேட்பாளருமான  தமிழிசை  சௌந்திரராஜன்  கலந்து கொண்டு பேசுகையில் தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து எதிர் அணியினர் கலங்கி போய் உள்ளனர். ஏனென்றால், அவர் தோல்வியடைந்த ஒரு கூட்டணி. திமுக, காங்கிரஸ் கூட்டணி நிச்சயமாக தோல்வியை தழுவும் என அனைவரும் உறுதியாக சொல்கிறார்கள் என்றால், அண்ணன் வைகோ அந்த பக்கம் உள்ளார். அதனால் நிச்சயமாக அந்த கூட்டணி தோல்வியடையும் என கூறினேன். திமுக, காங்கிரஸ் இலங்கை தமிழர்கள் பாதுகாக்காத ஒரு கூட்டணி. அவர்கள் ஓட்டு கேட்டு வந்தால், இலங்கையில் தமிழர்கள் பாதுகாத்தீர்களா, தமிழக மீனவர்களை பாதுகாத்தீர்களா என கேளுங்கள். விரட்டியடிக்கப்பட வேண்டியது அந்த கூட்டணி.
உலக அளவில் பிரதமராக இருப்பதற்கு தகுதி வாய்ந்தவர் பாரத பிரதமர் மோடி தான். திமுக தலைவர் ஸ்டாலின், ராகுலை நாங்கள் பிரதமராக முன்னிறுத்துகிறோம் என சொல்கிறார். மேற்கு வங்கத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் மேடையில் இருந்த போது, அதே துணிச்சல் உங்களுக்கு வந்ததா?. அந்த துணிச்சல் வராதாது. ஏனென்றால் தமிழகத்துக்கு மட்டும் ஒரு பிரதமர் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஜப்பானின் முதல்வராக இருந்து கொண்டு, தமிழகத்துக்கு ஒரு பிரதமரை கொண்டு வர வேண்டும் என நினைத்துகொண்டிருக்கிறீர்கள்.
தமிழகத்துக்கு என்ன கொண்டுவந்துள்ளீர்கள் என ஸ்டாலின் கேட்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கன்னியாகுமரியில் ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி, கோவையில் ராணுவ தளவாடங்களின் தொழிற்சாலை வரயிருக்கிறது. வேலூர் உள்ளிட்ட 12 ஸ்மார்ட் நகரங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழகத்துக்குள் இருக்கிறதா இல்லையா?.
எங்களால் பட்டியிலிட முடியும், இதே மேடையில் சவால் விடுகிறேன். யுபிஏ 1, யுபிஏ 2, ஸ்டாலின், கனிமொழி இந்த தமிழகத்துக்கு மட்டும் செய்தோம் என்ற பட்டியலை வெளியிட முடியுமா?. உங்களுக்கு வெளியிட முடியாது.
இவை அனைத்தும் தமிழகத்துக்கு அறிவித்த பின்னரும், தமிழகத்துக்கு என்ன செய்துள்ளனர் என ஸ்டாலின் கேட்கிறார். ஒரு வேளை இவையெல்லாம் ஜப்பானில் இருக்கிறதா என நினைத்தாரா என்று தெரியவில்லை. இதுவரை எந்த மத்திய அரசு செய்யாததை, மாநில அரசு துணையோடு எவ்வளவு நல்ல திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
வழக்காடு மன்றத்தில் தமிழை ஏன்  கொண்டு வரவில்லை என ஸ்டாலின் எங்களை பார்த்து கேட்கிறார். 5 முறை தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி, ஏன் தமிழ் மொழியை வளர்க்கவில்லை. ஏன் தமிழை வழக்காடு மன்றத்துக்கு கொண்டு வரவில்லை. ஏனென்றால் தமிழ் மொழியை வளர்க்கிறேன் என கூறி கனிமொழியை வளர்த்தார்கள்.
கனிமொழி இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் தான். இந்த மண்ணின் மகள் நான். உங்களில் ஒருத்தி நான் என்பதை தெளிவாக சொல்ல முடியும். என்னை கருப்பாக இருக்கிறேன் என்று சமூக வலைதளங்களில் கேலி பேசுகின்றனர். இந்த பனங்காட்டு கருப்பு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கு அஞ்சாது. இந்த பனங்காட்டுக்காரி தான் நான். இந்த மண்ணின் சொந்தக்காரி தான். இந்த தூத்துக்குடியின் மரபணு கூட கனிமொழியை ஒத்துக்கொள்ளாது.
தேசியமும், தெய்வீகமும் கொண்ட கூட்டணி இந்த கூட்டணி. தேசியத்துக்கும் எதற்கும் சம்பந்தமில்லாத கூட்டணி அந்த கூட்டணி. நல்லது நடக்க வேண்டுமென்றால், தூத்துக்குடியில் தாமரையும், விளாத்திகுளத்தில் இரட்டை இலையும் வெற்றி பெறும் என்பது எனது கருத்து. அது தான்  இந்த நாட்டுக்கான விதி, என்றார் அவர்.

#Paid Promotion