Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு தி மு க, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு தி மு க, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத் பானு வேட்புமனுக்களை கடந்த சில தினங்களாக பெற்று வருகிறார்.

நேற்று (24/03/2019) திமுக வேட்பாளர் சவுந்தர பாண்டியன் தனது மனுவை தாக்கல் செய்தார். அப்போது உடன் திமுக கழக மாநில கழக துணை பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன், கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) செயலாளர் சச்சிதானந்தம, மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல் கனி ஆகியோர்கள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து திமுக மாற்று வேட்பாளர்  வசந்தி இவர் திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டி மனைவியாவார்.                  

இதனைத் தொடர்ந்து சுயாட்சி ஆக கொடைரோடு அருகே உள்ள சில்லாலை பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி நாகஜோதி வயது 32. இவருக்கு ஓவியா என்ற மகளும் கவியரசு, கனி அரசு என்ற இரண்டு மகன்களும் உள்ளார். இவரது கணவர் பெருமாள் தமிழ்நாடு முழுக்க  சிமெண்ட் தளங்களுக்கு பாலீஸ் போடும் வேலையை செய்து வருகிறார். இவருக்கு வீடு வண்டி உள்ளிட்ட உள்ள மொத்த சொத்து மதிப்பு 2 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.        அதேபோன்று உள்ள முத்தனம் பட்டியைச் சேர்ந்த கருப்புச்சாமி வயது 55, இவரும் சுயேட்சையாக  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவரது படிப்பு எட்டாம் வகுப்பு  படித்துள்ளார். இவரது மனைவி பெயர் உமாமகேஸ்வரி மகன்கள் அருண்குமார் ஹரிஹரன் ஆகியோர் உள்ளனர் இவரது சொத்து மதிப்பு வீடு காலனி வீடு, இவரது பெயரிலும் இவரது மனைவி பெயரிலும் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூபாய் 80,000 உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.. தங்கம் ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.              

மருதம் மக்கள் கழகத்தைச் சேர்ந்த கனகராஜ் வயசு 31. இவர் எம்காம் பி எட் படித்துள்ளார்.  சுயமாக வத்தலக்குண்டில் டுடோரியல் வைத்து நடத்தி வருகிறார்.                    இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இவரது சொத்து மதிப்பு வண்டி, வங்கி இருப்பு 75 ஆயிரத்து 826 ரூபாய் குறிப்பிட்டுள்ளார். இவருடன் வேட்புமனு தாக்கல் செய்தபோது மருத மக்கள் கழகம் நிறுவனர் சரவண பாண்டியன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவி வர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.            வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி சேர்ந்த பாண்டி மகன் வேந்தன் வயது 34.   இவர் வழக்கறிஞராக நிலக்கோட்டையில் உள்ளார். இவரும் சாட்சியாக வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். இவரது மனைவி பெயர் திருகணி.    இவர்  தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவரது மகன் பெயர் உத்திர சித். இவரது குடும்ப சொத்து மதிப்பு வண்டி, வங்கி, இருப்பு கையிருப்பு உள்பட 3 லட்சத்து 47 ஆயிரத்து 650 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.   இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் டாக்டர் .சின்னத்துரை வயது 59. நேற்று மனு தாக்கல் செய்தார். இவரது சொந்த ஊர் நிலக்கோட்டை ஆகும். இவரது மனைவி பெயர் அலமேலுமங்கை, இவருக்கு இரண்டு மகன்கள் ராகேஷ் துறை, அகிலேஷ் துறை, இவர்கள் இரண்டு பேரும் டாக்டர்களாக உள்ளார்கள்.       சின்னதுரை பெயரில் சொத்து மதிப்பு வீடு வங்கி இருப்பு கையிருப்பு உட்பட?52 லட்சத்து 87 ஆயிரத்து 403 ரூபாய் ஆகும். இவரது மனைவி அலமேலு மங்கை பெயரில் வங்கி இருப்பு மற்றும் கையிருப்பு 29 லட்சத்து  38, 337 ரூபாய் உள்ளதாகவும்,,  ராகேஷ் துறை பெயரில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 240  ரூபாய், இரண்டாவது மகன் அகிலேஷ் துறை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!