Home செய்திகள்கீழக்கரை செய்திகள் உசிலம்பட்டியில் பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சாரம்…

உசிலம்பட்டியில் பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சாரம்…

by ஆசிரியர்

உசிலம்பட்டியில் அண்ணா திமுக கட்சி சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள திருமண மஹாலில் அண்ணா திமுக கட்சி சார்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பா நீதிபதி எம் எல் ஏ முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் கா.தவசி பாண்டியம்மாள் முன்னிலையில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் அறிமுக கூட்டமும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.  தேனி வேட்பாளர் ரவீந்த நாத் குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் நகரச் செயலாளர் பூமா ராஜா மாவட்ட நிர்வாகிகள் பிரேம் ஆனந்த் யூ.பி.ஆர். பஞ்சம்மாள் போத்திராஜ் சுதாகரன் போஸ் மகாலிங்கம் ராமநாதன் வழக்கறிஞர்கள் லட்சுமணன் சொக்கநாதன் பாலாஜி உக்கிரபாண்டி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தேனி பாராளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதே போல் மதுரை புறநகர் மாவட்டம் உ சிலம்பட்டி தேவர் சிலை அருகே இ காங்கிரஸ் கட்சி சார்பாக தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கூட்டணி கட்சி சார்பாக வரவேற்பு கொடுத்தனர். தேனி நாடாளுமன்றதொகுதியில் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து இ.காங் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரியாதை செலுத்தினர். மதுரை புறநகர் மாவட்டம்  உசிலம்பட்டியில்  தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு திமுக கூட்டணிக் கட்சியினர் திமுக கட்சி மாவட்ட செயலாளர் மணிமாறன் நகரச் செயலாளர் தங்கமலை பாண்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்தன், சுதாகரன் , காங்கிரஸ் நகரத் தலைவர் சசிவர்ணத்தேவர்  வட்டார தலைவர் வெஸ்டன்முருகன் மாவட்ட துணை தலைவர் மகேந்திரன் மாவட்ட செயலாளர் வினோத்குமார் மாநில செயற்குழு பிரேம்சந்தர் மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி எஸ்.ஓ.ஆர்.இளங்கோவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்கமலை மதிமுக கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா  மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

அதே போல் மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டியில் தேவர் சிலை அருகே தேனி நாடாளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அமமுக கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் இ.மகேந்திரன் தலைமையில் வரவேற்றனர் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் துரைராஜன் சேதுராமன் ஏழுமலை பக்ருதீன் நகர செயலாளர் குணசேகர பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் தங்கதமிழ்செல்வனுக்கு வரவேற்றனர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வரவேற்புக் கூட்டத்தில் முன்னாள் எம் எல் ஏ ஏ கே டி ராஜா சுப்புராஜ் மார்க்கெட் பிச்சை ராமகிருஷ்ணன் சிவப்பிரகாசம் செந்தில்குமார் தமிழ்ச்செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!