Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தூத்துக்குடியில் கனிமொழி தீவிர பிரச்சாரம்…

தூத்துக்குடியில் கனிமொழி தீவிர பிரச்சாரம்…

by ஆசிரியர்

“ஸ்டெர்லைட் பிரச்சினையில் ஆயிரம் பேரை காப்பாற்ற 13 பேரை சுட்டுக் கொன்றால் பரவாயில்லை என பேசியவர் தமிழிசை, அவருக்கா உங்கள் வாக்கு” ? – கனிமொழி

“ஸ்டெர்லைட் பிரச்சினையில் ஆயிரம் பேரை காப்பாற்ற 13 பேரை சுட்டுக் கொன்றால் பரவாயில்லை என பேசியவர் தமிழிசை, அவருக்கா உங்கள் வாக்கு” ? தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் , தோணுகால், வானரமுட்டி  பகுதிகளில் பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் “கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்தப் பகுதியில் உள்ள தொழில்கள் எல்லாம் வீணா போகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வேலை கிடைப்பதும் இல்லை வேலை பார்த்து கொண்டிருந்தவர்களின் வேலையும் போய்விட்டது. பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும், பாஜகவின் பினாமியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இது அதிமுக ஆட்சி அல்ல பிஜேபி ஆட்சி. மோடி ஆட்சி, தமிழகத்தை கொண்டு போய் அடகு வைத்து விட்டனர்.

பிரதமர் மோடி வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு வங்கி கணக்கில் போடுவதாக தெரிவித்தார், ஆனால் போடவில்லை,100 நாள் வேலை சரியாக வழங்கப்படவில்லை ,அப்படியே வழங்கப்பட்டாலும் ஊதியம் சரியாக வழங்கப்படாத நிலைதான் உள்ளது. தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை,முன்பு இருந்ததை விட மோசம் என்று இருக்கக்கூடிய நிலை , கேஸ் உள்ளிட்ட எல்லா விலைவாசியும் உயர்ந்துள்ளது,

யாருக்கும் வேலை கிடைக்காத நிலை உள்ளது. தீப்பெட்டி, கடலை மிட்டாய் உள்ளிட்ட தொழில்கள் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறட்சி ,வெள்ளம் மற்றும் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது மோடி வந்து பார்க்கவில்லை. ஸ்டெர்லைட் பிரச்சினையில் தமிழர்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பரவாயில்லை என்று கூறியவர் தமிழிசை சௌந்தரராஜன், அதனால் ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டனர் என்று கூறியவர் உங்களிடம் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் முடிந்தும் மீண்டும் திமுக ஆட்சி அமையும், அப்போது விவசாயக் கடன் ரத்து செய்யப்படும்,மாணவரின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக மாற்றியமைக்கப்படும், இந்த பகுதிகளில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும், டாஸ்மார்க்கை திமுக மூடும் என்றார்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை கனிமொழியிடம் – முறையிட்ட பெண்கள்

திமுக ஆட்சி வந்ததும் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம்  நடவடிக்கை எடுக்கப்படும்” என கனிமொழி வாக்குறுதி.

வானரமுட்டி பகுதியில் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது அங்கு 100நாள் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்களிடம் கனிமொழி உரையாடினார்

அப்போது இன்றைய சூழ்நிலையை பார்க்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தங்களுடைய பெண்குழந்தைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெவ்வேறு மாநிலங்களில் கல்வி பயின்று வருவதாகவும், இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதுவதாகவும், பெண் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு பயமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த கனிமொழி உண்மைதான் நானும் ஒத்துக்கொள்கிறேன்,  பயமாகத்தான் இருக்கிறது, நிச்சயமாக திமுக ஆட்சி வந்ததும் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், எல்லா இடத்தில் நிச்சயமாக பாதுகாப்பு கொடுக்கப்படும் என்றார். மேலும் இந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியவில்லை, போதிய தண்ணீர் வசதி இல்லை அது தவிர மான்களின் தொல்லைகள் அதிகமாக இருப்பதால், விவசாய பயிர்களை அழிந்துவருவதாகவும் பெண்கள் தெரிவித்தனர்

இதற்கு பதில் கூறிய கனிமொழி உறுதியாக தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும், வனத்துறை மூலம் வேலி அமைக்கப்பட்டு மான்கள் தொல்லையும் கட்டுப்படுத்தப்படும் என்றார். தேர்தல் பிரச்சாத்திற்கு இடையில்  கனிமொழி திடீரென கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் உள்ள கடலை மிட்டாய் கடைக்கு சென்று மக்களோடு மக்களாக நின்று கடலை மிட்டாய் வாங்கினார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com