Home செய்திகள் குழந்தை திருமணம்; மணமகள் -மண மகனின் பெற்றோர்கள் உட்பட 10 பேர் கைது: திண்டுக்கல் அருகே பரபரப்பு!

குழந்தை திருமணம்; மணமகள் -மண மகனின் பெற்றோர்கள் உட்பட 10 பேர் கைது: திண்டுக்கல் அருகே பரபரப்பு!

by Askar

குழந்தை திருமணம்; மணமகள் -மண மகனின் பெற்றோர்கள் உட்பட 10 பேர் கைது: திண்டுக்கல் அருகே பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவிலூர் தோப்பு பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் பெரியக்காள் என்ற பெரியநாயகி தம்பதியின் மகள் வைஷ்ணவி (வயது 15) ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் அவருடைய சகோதரி நதிவதனா சின்னதாராபுரம் சேர்ந்த காளீஸ்வரி மகன் செல்வம் என்பவருக்கு ஓராண்டுக்கு முன்பு நதிவதனாவை திருமணம் செய்து கொடுத்த நிலையில் இருவரும் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நதிவதனாவை கொழுந்தனார் தமிழரசன்(22) மற்றும் அவரது குடும்பத்தினர் 3 மாதங்களுக்கு முன்பு சின்னதாராபுரம் ஊருக்கு விருந்துக்காக வீட்டிற்கு வாங்கல் என கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு அறிவிப்புக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் பத்தாம் வகுப்பு மாணவி வைஷ்ணவிக்கும் தமிழரசனுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்று உள்ளது.

திருமணம் முடிந்த நிலையில் வைஷ்ணவி -தமிழரசன் கடந்த 3 மாதமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் வைஷ்ணவியின் சகோதரி நதிவதனா கணவர் காளீஸ்வரன் மற்றும் அவரது மாமியார் காளீஸ்வரி ஆகியோர் சேர்ந்து சண்டைபோட்டு நதிவதனாவை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இந்த சண்டையினால் மாணவி வைஷ்ணவி யின் தாயார் பெரியநாயகி ஊரடங்கின்போது விருந்துக்காக அழைத்து சென்றதாக கூறி தனது மகளை கடத்தி விட்டு சென்று கட்டாய திருமணம் செய்ததாக வடமதுரை மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீஸ் விசாரணையில் குழந்தைத் திருமணத்திற்கு காரணமான மணமகன் -மணமகள் வீட்டார்கள் தான் காரணம் என உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

இதை தொடர்ந்து மணமகன்-மணமகள் வீட்டார் உட்பட 10 பேரை வடமதுரை மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com