Home செய்திகள் தொண்டு நிறுவனம் சார்பாக கடன் வாங்கித்தருவாத கூறிவந்த பெண் ஒருவரை பிடித்து செம்பட்டி காவல்துறையினர் விசாரணை!

தொண்டு நிறுவனம் சார்பாக கடன் வாங்கித்தருவாத கூறிவந்த பெண் ஒருவரை பிடித்து செம்பட்டி காவல்துறையினர் விசாரணை!

by Askar

தொண்டு நிறுவனம் சார்பாக கடன் வாங்கித்தருவாத கூறிவந்த பெண் ஒருவரை பிடித்து செம்பட்டி காவல்துறையினர் விசாரணை!

தேனி மாவட்டம் திருமலாபுரம் என்ற ஊரை சேர்ந்தவர் அருள் செல்வி W/O கணேசன் (வயது 50) இவர் கடந்த ஒருமாத காலமாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கூலம்பட்டி பகுதியில் வந்து தான் அருள் கிராம தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதில் கிராமம் வாரியாக சென்று பெண்கள் குழு அமைத்து நிறுவனம் சார்பாக ரூபாய் 10,0000/ லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாவும் அதற்கு முன்பணமாக நபர் ஒருவர் ரூபாய் 1500 செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இவரது பேச்சை நம்பிய ஆத்தூர் தாலுகா பகுதி கூலம்பட்டியை சேர்ந்த பெண்கள் 30 பேர் அவரிடம் ரூபாய் 40000 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு கடன் வாங்கித்தராமல் அந்த பெண் காலம் தாழ்த்தியதோடு மட்டும் அல்லாமல் மேலும் ஒரு குழுவில் பணம் பெற முயற்சித்துள்ளார்.

இதனால் அவர் மீது பணம் கொடுத்தவர்களுக்கு சந்தேகம் வந்தது, இந்நிலையில் 06/06/20 இன்றுகாலை 10 மணியளவில் கூலம்பட்டிக்கு  பணம் வாங்க வந்த அருள் செல்வியை அமரவைத்துக்கொண்டு செம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவலர்கள் விரைந்து வந்து அவரை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com