ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை ரமலான் நகர் அருகாமையில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவு நீர் குழாய் பதிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கையில் .ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கழிவுநீர்கள் குழாய் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கின்றது. இந்த நிலையத்திலிருந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளிப்பகுதியில் திறந்து விடுவதால் அதை சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதாலும் தொற்று நோய் பரவுவதாலும் அடுத்த தலைமுறை அழிவை நோக்கி செல்வதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்பகுதி கிராம மக்கள் விவசாயத்தையும் கால்நடைகளை பராமரித்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் விவசாயம் நிலங்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியே வரக்கூடிய தண்ணீரை கால்நடைகள் அருந்துவதால் கால்நடைகள் மூலம் பெறக்கூடிய பால்கள் துர்நாற்றத்தோடும் விஷத்தன்மை இருப்பதாகவும் பால் விற்பனை நிலையம் எங்கள் பாலை வாங்காமல் நிராகரித்து வருகின்றனர். கேள்வி எழுப்பினால் உங்கள் பாலில் துர்நாற்றம் அடிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தக் கழிவு நீர் நிலையத்தின் மூலம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாகவும் இதனால் எங்கள் தலைமுறை அழிவை நோக்கி செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் கூடுதல் கவனம் செலுத்தி கழிவுநீர் நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்களுக்கும் கால்நடைகளுக்கும் முழுமையாக பாதுகாப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
76
You must be logged in to post a comment.