Home செய்திகள் பாலக்கோடு பகுதியில் விதிமுறை மீறி இயங்கியதால் நான்கு கடைகளுக்கு உதவிஆட்சியர் சீல் வைத்தார்..

பாலக்கோடு பகுதியில் விதிமுறை மீறி இயங்கியதால் நான்கு கடைகளுக்கு உதவிஆட்சியர் சீல் வைத்தார்..

by Askar

தர்மபுரி மாவட்டம் தற்போது ஆரஞ்சு மண்டல பகுதியாக உள்ளதால் மாவட்ட ஆட்சியர் மலர் விழி உத்தரவுப்படி சிறு குறு தொழில்கள் தனிக்கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது அதன்படி காய்கறி கடைகள் மளிகைக் கடைகள் ஹோட்டல்கள் பேக்கரிகள் போன்றவை இன்று திறக்கப்பட்டு இருந்தன ஆனால் அரசு அறிவுறுத்திய நெறி முறைப்படி ஒரு சில கடைகளே செயல்பட்டு வந்தன.

பெரும்பாலான கடைகளில் முக கவசம் கையுறை போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணியாமலும் மேலும் கடைக்கு உள்ளேயும் வெளியேயும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்து வந்தனர் தர்மபுரி மாவட்ட உதவி ஆட்சியர் தேன்மொழி பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா ஆகியோர் பாலக்கோடு நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பேக்கரிகள் மற்றும் 2 மளிகை கடைகளில் அரசு விதிமுறைகளை மீறி எந்தவித பாதுகாப்பு கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்ததும் மக்கள் கூட்டமாக இடைவெளியின்றி பொருட்களை வாங்கி செல்வதுமாக இருந்தனர். உடனடியாக நான்கு கடைகளுக்கும் உதவி ஆட்சியர் தேன்மொழி சீல் வைத்தார்.

மேலும் இது போன்று செயல்படும் அனைத்து கடைகளிலும் மூடி சீல் வைக்கப்படும் என எச்சரித்து சென்றுள்ளார் அரசு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கடைக்காரர்களும் பொதுமக்களும் சிறிதும் கவலையின்றி எந்த வித பாதுகாப்பும் இன்றி பொருட்களை விற்பதும் வாங்குவதும் ஆக இருப்பது ஆரஞ்சு மண்டலமாக உள்ள தர்மபுரி சிகப்பு மண்டலமாக மாற்றி விடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com