
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 9 – அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகுடபதி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.இதில் முக்கிய கோரிக்கைகளாக ஊராட்சி செயலாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கிடவும்,கணினி உதவியாளர்கள் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்குகாலமுறை ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்கிடவும்,கொரோனோ காலத்தில் நோய்த்தொற்று பரவுவதை கருத்தில் கொள்ளாமல் ஜல் ஜீவன் திட்டம்,மத்திய அரசின் அனைவருக்கும் வீடுகள் திட்டம்,முழு சுகாதார திட்டத்தின்படி கழிப்பறை கட்டும் பணி மற்றும் பொதுநிதி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிர்பந்திப்பதை கைவிடக் கோரியும்,கொரோனோ பரவல் தடுப்பு பணியில் உள்ள ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ வசதியும், கொரோனோவால் உயிரிழந்த வளர்ச்சி துறையினருக்கு குடும்பத்திற்கு தலா 50 லட்சம் வழங்கிடவும், வளர்ச்சி துறையின் கொரோனோ பாதித்த ஊழியர்களுக்கு2 லட்சம் அரசாணைப்படி உடனடியாக வழங்கிட வேண்டும்.என 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போரட்டத்தின் ஒருபகுதியாகதமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம் சார்பாகஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.இதனால் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது..
You must be logged in to post a comment.