கொலை குற்றவாளியால் கொல்லப்பட்ட காவலருக்கு செம்பட்டி காவல் நிலையத்தில் மலர்தூவி வீர வணக்கம்

தூத்துக்குடி மாவாட்டம் மேலக்குறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கொலை வழக்கு ஒன்றில் ஞீ வைகுண்டம் காவல்துறையினர் கைது செய்ய சென்றபோதுகாவல்துறையினரை கண்டவுடன் துரைமுத்து மற்றும் அவனது சகோதரன் தப்பியோடியதை அடுத்துகாவல்துறையினர் அவர்களை துரத்திப்பிடிக்க முயன்றபோது அவர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதால்ஆழ்வார் திருநகரி காவல்நிலைய முதல்நிலைக் காவலர் .சுப்பிரமணியன்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பனியில் வீரமரணமடைந்த ,சுப்பிரமணியம்  ஆத்மா சாந்தியடைய செம்பட்டி காவல்துறை சார்பாக நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர்கள் நாராயணன்,சரவணக்குமார், மற்றும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள்மறைந்த காவலர் . சுப்பிரமணி  படத்திற்கு மலர்தூவி வீர வணக்கம் செலுத்தினர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..