கீழக்கரையை விட்டு விலகாத டெங்கும்.. கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகமும்..

கடந்த சில மாதங்கள் முன்பு வரை டெங்கு பரபரப்பு ஊர் முழுவதும் பரவி வந்தது.  மாவட்ட ஆட்சியரும் அவருடைய பங்குக்கு நகராட்சி நிர்வாகத்தை முடுக்கி விடுவதை விட சாமானிய மக்களின் இடங்களில் கொட்டி கிடக்கும் குப்பைகளுக்கு பல ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து சென்றார். அதைத் தொடர்ந்து டெங்கு நோயும் கட்டுக்குள் வந்தது போல் ஒரு மாயையும் உண்டானது.

ஆனால் உண்மையில் டெங்கு கொசு கீழ்க்கரையை விட்டு விலகுவதாகவே இல்லை. ஆனால் சமீபத்தில் கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் மட்டும் 4 நபர்களுக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடுமையாக சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.  இது பற்றி கீழக்கரை நகர் நல இயக்கம் பசீர் மரைக்கா கூறுகையில் வடக்குத் தெருவில் உள்ள டிரக் கொட்டகை பகுதியில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பல லட்சம் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள், என்று வேதனையுடன் கூறினார்

இந்த ட்ரக் கொட்டகைதான் டெங்கு உற்பத்தியாகும் கொட்டகையாக உள்ளது என்பதை கடந்த ஆண்டே (30-11-2016) கீழை நியூஸ் சார்பாக சுட்டிக்காட்டியிருந்தோம் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அதே நிலைதான் நீடிக்கிறது என்பது வேதனைக்குரிய விசயம்.

டெங்கு கொட்டகையாக மாறி வரும் வடக்குத் தெரு ட்ரக் கொட்டகை…