Home செய்திகள் வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..

வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..

by ஆசிரியர்
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த பாலாஜி நகர் பகுதியில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவரது வீட்டில் இரவு 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ராமமூர்த்தியின் மனைவி காஞ்சனா, அவரது 6 வயது பெண் குழந்தை அட்சயா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் ராமமூர்த்தியும் உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com