Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஊரடங்கால் வெளியூர்களில் சிக்கியிருபோர் சரியான முறையில் ‘பாஸ்’ வாங்காமல் பயணித்து சிக்கலில் சிக்க வேண்டாம் – இ – பாஸ் பெற வழிமுறை என்ன ? அறியலாம் வாங்க..

ஊரடங்கால் வெளியூர்களில் சிக்கியிருபோர் சரியான முறையில் ‘பாஸ்’ வாங்காமல் பயணித்து சிக்கலில் சிக்க வேண்டாம் – இ – பாஸ் பெற வழிமுறை என்ன ? அறியலாம் வாங்க..

by ஆசிரியர்

கொரோனா பரவலை தடுக்க ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிக அவசரமாக வெளியே செல்லும் தேவை இருப்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற முடியும். இந்தநிலையில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு, தமிழக அரசால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டங்களை கடந்து செல்லும் பாஸ் அனுமதிச் சீட்டு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் இன்று முதல் வழங்கப்படுகிறது.

இது குறித்து கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்,சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் கூறுகையில், ”ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னதாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல நகரங்களுக்கு சொந்த வேலை காரணமாகவும் சென்றவர்களும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்தவர்களும், கொரானாவுக்காக போடப்பட்ட திடீர் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாமல், வேறு வழியின்றி சொந்தக்காரர்கள் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்து சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பலர், முறையாக அரசிடம் விண்ணப்பித்து பாஸ் வாங்காமல் சொந்த ஊருக்கு குருட்டு தைரியத்தில் குடும்பம் பிள்ளை குட்டிகளுடன் பயணிப்பது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல் ஆகின்றது.

சிலர், தாங்கள் போலி பாஸில் தான் பயணிக்கிறோம் என்று கூட தெரியாமல் காவல்துறையில் சிக்கி, தங்கள் மீது மோசடி வழக்கு பதியப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு கண்ணீர் வடித்து வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு நபருக்கு பாஸ் வாங்கி விட்டு, பயமின்றி கூடுதல் எண்ணக்கையில் பயணித்து வருவோர், சொந்த ஊரின் எல்லையை அடைந்தும் கூட, தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல்  காவல்துறை கண்காணிப்பு அதிகாரிகளிடம் சிக்கி, முகாம்களில் அடைக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. ஆகவே இந்த ஊரடங்கு காலத்தில் வெளி மாவட்டங்களில் சிக்கித் தவிப்போர் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கு முன்னதாக தமிழக அரசு அவ்வப்போது வெளியிடும் வழிமுறைகளை பின்பற்றி முறையாக பயண அனுமதி சீட்டுக்கு விண்ணப்பித்து அதனை பெற்ற பின்னரே பயணிக்க முன் வர வேண்டும்.
அதனை விடுத்து சரியான முறையில் ‘பாஸ்’ வாங்காமல் பயணித்து சிக்கலில் சிக்க வேண்டாம். இந்த இ-பாஸ் வாங்குவதற்கு எந்தவொரு இடைத்தரகரையும் எவரும் அணுக வேண்டிய அவசியமில்லை. தமிழக அரசால் இ-பாஸ் வழங்குவதெற்கென வெளியிடப்பட்டிருக்கும் வலைதளத்தில் மிகச் சுலபமாக விண்ணப்பித்து பாஸ் பெறலாம். ஆகவே இந்த விஷயத்தில் அனைவரும் மிகக் கவனமுடன் செயல்பட வேண்டும். ஏற்கனவே பல இன்னல்களில் சிக்கியிருக்கும் நாம், மேலும் பல சிக்கல்களை உருவாக்கி கொள்ளக் கூடாது.” என்று தெரிவித்தார்.
இ-பாஸ் விண்ணப்பிக்க tnepass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மொபைல் போண் மூலமும் விண்ணப்பித்து அனுமதி சீட்டினை பெறலாம்.இந்த தனி நபருக்கான இ-பாஸ் தற்போது திருமணம், மரணம், மருத்துவ தேவை, வெளி மாவட்டங்களில் சிக்கி தவிப்போர் உள்ளிட்ட நான்கு காரணங்களுக்காக வழங்கப்படுகிறது. அ)திருமணம்: நெருங்கிய உறவினரின் திருமணத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். திருமண அழைப்பிதல் இணைக்கப்பட வேண்டும், ஆ)மரணம்: மரணம் குறித்து மருத்துவர் அல்லது கிராம நிர்வாக அதிகாரியின் சான்று இணைக்கப்பட வேண்டும். இ)மருத்துவ காரணங்களுக்கு என்றால் நோயாளியுடன் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும். அதற்கு மருத்துவரின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். ஈ)மருத்துவ காரணங்களுக்காக வெளி மாவட்டங்களுக்கு வந்து ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவிப்பவர்கள்   விதிமுறைகள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்பவர்களும் அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்தப்படுவர். அவர்கள் இதுபற்றி உடனடியாக சுகாதாரததுறை அதிகாரிக்கு தகவல் அளிக்க வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் கடந்த 15 நாட்களில் தொடர்பில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இந்த இ-பாஸ் மாற்றத்தக்கதல்ல, தவறாக பயன்படுத்தினால் தண்டனைக்குரிய குற்றமாகும். வழங்கப்பட்ட பாஸ் பிரதியை பயணத்தின்போது வாகனத்தில் ஒட்டியிருக்க வேண்டும். பயணத்தின்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். முககவசம், கிருமிநாசினி போன்ற ஏற்பாடுகள் இருப்துடன் சமூகவிலக்கலையும் கடைபிடிக்க வேண்டும்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com