Home செய்திகள் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்தது ஜனநாயகப் படுகொலை என காட்பாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி பேட்டி

ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்தது ஜனநாயகப் படுகொலை என காட்பாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி பேட்டி

by mohan

காட்பாடி அடுத்த இளைய நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை மற்றும் அக்னி வசந்த விழாவை துவக்கி வைக்க தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வருகை தந்து ஸ்ரீ சத்ய நாராயண பூஜை மற்றும் அக்கினி வசந்த விழாவை துவக்கி வைத்தார் சாமி தரிசனம் செய்தார் அதன் பின்னர் 2008 ஏழை எளிய பெண்களுக்கு சேலைகலை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் இளைய நல்லூரை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இ.எஸ்.சுகுமாரன் வி.என்.சந்திரபாபு நாயுடு சோளிங்கர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஏ.சார்லஸ் ஜி.வேல்முருகன் ஜி.சின்னராஜ் கே.அன்பு மயில்வேல் உள்ளிட்ட பல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி இடைத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வேலூர் வருகை புரிந்துள்ள தாகவும் மேலும் எங்களுடைய மதசார்பற்ற கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது மக்களுடைய பிரச்சினைகளை மக்களுடைய தேவைகளை உணர்ந்த ஒரு அரசியல் இயக்கம் எங்களுடைய இயக்கம் எனவே எங்களுடைய மதசார்பற்ற கூட்டணி உடையார் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மகத்தான வெற்றி பெறுவார்.அதிமுக இயக்கம் ஒரு செயல்படாத இயக்கம் அவர்கள் நீட் தேர்வு குடியரசுத் தலைவரால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிராகரிக்கப்பட்டு அந்த உண்மையை வெளியே சொல்லாமல் சட்டமன்றத்திற்கும் சொல்லாமல் மக்கள் மன்றத்திற்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த கொடுமை இன்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது எனவே எல்லாவற்றையும் மறைக்கக் கூடிய ஆட்சியாளர்கள் அதிமுகவை சார்ந்தவர்கள் ஆனால் எங்களுடைய கூட்டணி என்பது மக்களுடைய பிரச்சனைகளுக்காக போராடுகிற கூட்டணி எனவே மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம்.மசூதியை இடிப்பதற்க்கு பாஜகவுடன் கைகோர்த்து சென்றது அதிமுக தான் அதனால் முதலமைச்சரிடம் அந்த கேள்வியை முன்வையுங்கள் அதிமுகவில் இரட்டைத் தன்மை உள்ளதால் இரட்டை கருத்து உள்ளது முத்தலாக் விவகாரத்தில் காலையில் ஆதரித்து மாலையில் எதிர்த்திருக்கிறார்கள் காரணம் இரட்டை தலைமை மற்றும் இரண்டு கொள்கை அதுதான் காரணம்.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்தது இந்திய ஜனநாயக படுகொலை தமிழகத்தின் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு எதிர் கட்சியின்னுடைய தலைவர் ஒரு மண்டபத்தில் உரையாற்றுகிறார் மண்டபத்தில் பேசுவதற்கு முன் கூட்டியே தடைவிதித்து இருந்தால் பிரச்சனை இருக்காது அப்படியே இருந்தாலும் தடை விதிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது அதையெல்லாம் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் கூட முதலமைச்சரும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் கூப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவரை பேச விடுங்கள் என்று கூறியிருக்க வேண்டுமே தவிர ஒரு மண்டபத்தில் கட்சி ஊழியர்களை அழைத்துப் பேசுகிறார் இதில் என்ன தவறு உள்ளது அவர்களுக்கு ஜனநாயகமே மறந்து போயுள்ளது பாரதிய ஜனதாவுடன் சேர்ந்த பிறகு அதிமுகவும் அவர்களைப் போலவே சர்வாதிகார செயலிலே ஈடுபடுகிறார்களே ஒழிய ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மண்டபத்தில் பேசுவது தவறா அதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தாா்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com