Home செய்திகள் புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி தமிழாய்வுத் துறையின் இனியொரு விதி செய்வோம் மகளிர் தின கருத்தரங்கம்.

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி தமிழாய்வுத் துறையின் இனியொரு விதி செய்வோம் மகளிர் தின கருத்தரங்கம்.

by mohan

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தமிழாய்வுத் துறையின் சார்பாக மகளிர் தினமன்று மாலை 6 மணியளவில் “இனியொரு விதி செய்வோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் முதலாவதாக தமிழாய்வுத் துறை பொறுப்பு பேராசிரியர் முனைவர்.சி.பிராபகரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றதுடன் சிறப்பு விருந்தினரையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் முனைவர் திரு.அ.ரா.பொன்பெரியசாமி அவர்கள் தலைமையேற்று உரையாற்றிய பொழுது பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பதோடு மட்டுமல்லாமல் வீடு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருப்பவரும் பெண் தான் என்பதை பெருமிதத்தோடு கூறினார். அதனைத் தொடர்ந்து இக்கல்லூரியின் தலைவர் பொறிஞர் திரு.பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அப்பொழுது அவர் கூறுகையில் பெண்ணானவள் நமது சமுதாயத்தில் வைரமாக வைத்து என்னத்தக்கவர்களாக இருக்கின்றனர். ஆகவே தான் பெண்ணை நாம் போற்றி புகழ்கிறோம். வாழ்க்கை என்பது நமக்காக வாழ்வதல்ல பிறருக்காக வாழ்வது என்பதை ஒவ்வொரு மாணவர்களும் உணர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் ஒருங்கிணைப்பாளர் திரு. முனைவர் எம்.மீனாட்சி சுந்தரம் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசுகையில் இன்றைய அளவில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு உதாரணமாக நமது கல்லூரியில் படிக்கின்றவர்களில் 80% பெண்கள் தான் என்றும் அதற்கு கல்லூரியில் பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பே என்றுக் கூறி சிறப்பித்தார். இதற்கிடையில் திருமதி k.வளர்மதி (ரோட்டரி சக்தி மகளிர் அமைப்புத் தலைவி) அவர்களுக்கு அவருடைய சேவையைப் பாராட்டி சேவைத் திலகம் என்ற விருது கல்லூரியின் சார்பாக அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் கூறுகையில் இந்த ஒரு நாள் மட்டுமல்ல ஆண்டின் ஒவ்வொரு நாளும் பெண்களுக்காக மகளிர் தினம் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் பெண்ணை போற்றவும் மதிக்கவும் செய்ய வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் திருமதி.மு.ஜோதிலட்சுமி அவர்கள் “இனியொரு விதி செய்வோம்” என்றத் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வாக்கு இன்றைக்கு மாறி பிறரை நோகடித்து நகைச்சுவை செய்து மகிழ்ச்சி அடைவதே இன்றைக்கு வாடிக்கையாகி விட்டது ஆகவே அதுபோன்ற செயலில் மாணவர்கள் ஈடுபட வேண்டாமென்றும், நூலைப் படிக்கின்ற பழக்கத்தையும், நாட்க்குறிப்பு எழுதும் பழக்கத்தையும் ஒவ்வொரு மாணவர்களும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தன்னுடைய இலட்சியங்களை தினமும் ஒரு வெள்ளைத் தாளில் குறைந்தது மூன்று முறையாவது எழுதும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் ஒருநாள் தங்களுடைய இலட்சியத்தை அடைவது நிச்சயம் என்றும், பெண்கள் மரபு சார்ந்த தடைகளைத் தாண்டி சாதிக்க வேண்டுமென்றும், அழகு என்பது புறத்தைச் சார்ந்தது அல்ல உள்ளம் சார்ந்தது ஆகவே ஒவ்வொரு பெண்களும் மனசோர்வின்றி முயற்சி மற்றும் பயிற்சியுடன் உழைத்து பல சாதனைகளை படைக்க வேண்டுமென்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் 1௦௦ க்கும் மே ற்ப்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத் துறை பொறுப்பாசிரியர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். இறுதியாக தமிழாய்வுத் துறை பேராசிரியை திருமதி.சசிகலா அவர்கள் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!