Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

இராமநாதபுரத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில்  நடைபெற்ற சுருக்கத்திருத்த சிறப்பு முகாம்களை  மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  இராமநாதபுரம் வட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில்  இன்று (23.02.2019) மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ  ராவ் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம்  செய்திட ஏதுவாக நடைபெற்ற சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தியத் தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி 01.01.2019-ஆம் நாளை தகுதி  நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற்றது. அதனை  அடிப்படையாகக் கொண்டு கடந்த 31.01.2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களை தங்களது பெயர்களை சேர்க்க, பெயர் திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய வசதியா 2 மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,367 வாக்குச்சாவடி மையங்களில் இன்று (23.02.2019) மற்றும் நாளை (24.02.2019) சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இராமநாதபுரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட உச்சிப்புளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குயவன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இராமநாதபுரம் ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ்  தெரிவிக்கையில்: மாவட்டத்தில் உள்ள 1,367 வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றைய தினம் சுருக்கத்திருத்த  சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாம்களில் முதன்முறையாக பெயர் சேர்க்க படிவம்-6,வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம்-7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான  உருவப்படம் இடம் பெறச் செய்ய படிவம்-8, ஒரு சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம்  மாறியிருந்தால் படிவம்-8 ஏ உள்ளிட்ட படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகள் 18  வயது நிரம்பியிருந்தால் அவர்களை வாக்காளர் பட்டியிலில் சேர்ப்பதற்கு சிறப்புக் கவனம்  செலுத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் தேவை அறிந்து உரிய விண்ணப்பங்களை வழங்கவும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில்  பொதுமக்களுக்கு உதவும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்சிறப்பு முகாம் நாளை (24.02.2019- ஞாயிற்றுக்கிழமை) அனைத்து  வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து  வாக்காளர் சுருக்கத் திருத்த பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் பொன்.கார்த்திகேயன் உடனிருந்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com