ராமநாதபுரம் ஒன்றியம் மாதவனூர் ஊராட்சி, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம், பிச்சங்குறிச்சி ஊராட்சி சீனாங்குடி மக்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார். கலெக்டர் பேசுகையில்,பொதுவாக இப்பகுதியில் அதிகளவு விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. வேளாண் பணியில் மக்கள் முழுமையாக ஈடுபடவேண்டும். கூட்டுறவுத்துறை மூலம் விவசாய கடன்கள் தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் இடுபொருள்கள் போதியளவு வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்திய மழை நீரை பயன்படுத்தி விவசாய பணிகளை முழுமையாக மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.ஊராட்சி வளர்ச்சிக்கு தேவையான திட்டப்பணிகளை நிறைவேற்ற மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஊரக வளர்ச்சித்துறை மூலம் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொள்வர்.அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், படிப்படியாக நிறைவேற்றி ஊராட்சியின் வளர்ச்சி, தனிநபர் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும். மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் சுய தொழிலில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் மகளிர் குழுக்களுக்கு வேலைவாய்ப்பு, நிலையான வருமானம் கிடைக்கும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். ராமநாதபுரம் தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம்,வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரைச் செல்வி,ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ராதிகா பிரபு, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், பிச்சங்குறிச்சி ஊராட்சி தலைவர் நாகமுத்து, மாதவனூர் ஊராட்சி தலைவர் ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
44
You must be logged in to post a comment.