Home செய்திகள் கடலோர காவல்படை தென்பகுதி தலைமையகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்..

கடலோர காவல்படை தென்பகுதி தலைமையகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்..

by ஆசிரியர்

கடலோர காவல்படை மையத்தின் தென்பகுதி தலைமையகமாக தூத்துக்குடி கடலோரக் காவல்படை தரம் உயர்த்தப்பட்டுள்ளது . இதன் திறப்பு விழா தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள விமானம் மூலம் தூத்துக்குடி வந்த கவர்னரை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் வரவேற்றனர். விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , தனி தலைமையகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள கடலோர காவல் படையின் புதிய தலைமையகத்தை அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக கடலோர காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார், நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல கடலோர காவல் படையின் கமாண்டர், S. பரமேஷ் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுனர் ” 1978ல் ஆரம்பிக்கப்பட்ட கடலோரக் காவல் சட்டப் பிரிவு மூலம் கடலோர காவல் படை தனி அமைப்பாக உருவாக்கப்பட்டது. இதன் பணி கடல் வளங்களைப் பாதுகாப்பது, கப்பல்களைப் பாதுகாப்பது, கடல் வழிக் குடியேற்றத்தைக் கண்காணிப்பது, கடல்வழி போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது ஆகியனவாகும். கடலோரக் காவல்படையானது இந்தியக் கடற்படை, மீன் வளத்துறை, வருவாய் மற்றும் குடியேற்றத்துறை, காவல்துறை போன்றவற்றுடன் ஒத்துழைத்து தன் பணியை சிறப்பாக செய்து வருகிறது ” என கூறினார்

விழாவில் பேசிய கிழக்கு மண்டல கமாண்டர் பரமேஷ் “இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டலத்தின் கீழ் இயங்கிவரும் தூத்துக்குடி, கடலோரக் காவல்படை தனி தலைமையகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக கிழக்கு கடற்கரையில் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவு அதிகரிக்கப்பட்டு தூத்துக்குடி கடலோரக் காவல் படையின் பாதுகாப்பு கடற்கரைப்பகுதி எல்லை 285 கிலோமீட்டர் ஆக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் கோடியக்கரை முதல் அரபிக்கடலின் பூவார் ஏரி கழிமுகத் துவாரம் வரையில் எல்லைகளை விரிவு படுத்தப் பட்டுள்ளன .முன்னர் இருந்த நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுடன் சேர்த்து தற்போது தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,ஆகிய மாவட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மன்னார் வளைகுடாவுடன் பாக் ஜலசந்தி பகுதிகளும் தூத்துக்குடி தலைமையகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன” என கூறினார். விழாவில் கடலோர காவல் படை புதிய தலைமையகத்தின் கமாண்டர் (பொறுப்பு) டி ஐ ஜி அரவிந்த் சர்மா , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, வவுசி துறைமுக சபை தலைவர் இராமச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி கடலோர காவல்படை ஐஜி அரவிந்த் ஷர்மா தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com