திரைபடத்திற்கு தொந்தரவு செய்த ரசிகர்களை உடனடியாக அப்புறப்படுத்திய காவல்துறை..

மதுரை திருநகரில் உள்ள மணி இம்பாலா திரை அரங்கில் விசுவாசம் படம் ஓடிக்கொண்டிருந்தது அப்போது அஜித் ரசிகர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஸ்கிரீன் மேலே ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் தியேட்டர் நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே விரைவாக செயல்பட்ட காவல்துறையினர் ஸ்கிரீன் மேலே மீது ஏறிக்கொண்டு ஆடிய நபர்கள் மீது மற்றும் படம் பார்க்க அமர்ந்திருந்த ரசிகர்களை படம் பார்க்க விடாமல் ரகளையில் ஈடுபட்டவர்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். பிறகு அமைதியாக திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டை திரையரங்கில் உள்ளவர்கள் பாராட்டினார்கள்.

செய்தி . வி காளமேகம் . மதுரை மாவட்டம்