இராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 17 இல் 14 வது செஸ் போட்டி..

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செஸ் அசோசியேஷன், ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி சார்பில் மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 14 வது செஸ் போட்டி பிப்ரவரி 17.02.2019 அன்று நடைபெற உள்ளது. நான்கு பிரிவுகளாக நடைபெறும்.

இப்போட்டிகளில் 9, 11,13, 15 வயதிற்கு உட்பட்டோர் கலந்துகொள்ளலாம். நுழைவு கட்டணம் ரூ.150, மாவட்ட பதிவு கட்டணம் ரூ.100 . மாவட்ட பதிவிற்கு அதற்குரிய விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். சொந்த சதுரங்கப்பலகை மற்றும் கடிகாரம் கொண்டு வர வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலரை 94431 34135,  82480 88338 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மாவட்ட பாதி போட்டிக்கான நுழைவு படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல chessramnad.blogspot.in மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை எண் 9 அலங்கச்சேரி தெரு மாடியில் உள்ள ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் 13.02.2019 க்குள் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்றிடம் பெறும் ஆண்கள், பெண்களுக்கு கேடயம், 4 வது, 5 வது இடம் பெறும் ஆண்கள், பெண்களுக்கு பதக்கம் பரிசு வழங்கப்படும் என மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் தெரிவித்துள்ளார்.