Home செய்திகள் மதுரை – செயின் பறிப்பு நான்கு நபர்கள் கைது

மதுரை – செயின் பறிப்பு நான்கு நபர்கள் கைது

by mohan

மதுரை தத்தனேரி சின்னமுத்து மகன் அன்பழகன் என்பவர் தனது அலுவலகப்பணி முடித்துவிட்டு இரவு பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத 4 நபர்கள் சேர்ந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாக போலிசில் புகாா் அளித்தாா்.இது தொடா்பாக  வழக்குப்பதிவு செய்த போலிசாா் விசாரணை செய்தபோது மதுரை திடீர்நகரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ஸ்ரீராகவேந்திரா மற்றும் 2 இளம் சிறார்கள் என தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது கார்த்திக் என்ற மெண்டல் கார்த்திக்குடன் சேர்ந்து மேற்படி குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டனர் எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 11.460 கிராம் தங்க செயினை கைப்பற்றி ஸ்ரீராகவேந்திரா-மெண்டல் கார்த்திக்கை மதுரை மத்திய சிறையிலும் இரண்டு இளம்சிறார்கள் திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கும் அனுப்பப்பட்டனர்

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com