அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இனி அமீரகத்தில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற அமீரக அரசாங்கம் தடை விதித்துள்ளது.
சவுதி அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீடு முறையை Quota) பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அமீரக குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இனி ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்படும் என்று இஸ்லாமிய விவகாரம் மற்றும் நல்வாழ்வு துறை அதிகாரி டாக்டர் அஹ்மத் அல் மூசா தெரிவித்துள்ளார்.
சவூதி அரசு ஒவ்வொறு நாட்டுக்கும் அந்த நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் ஹஜ் வீசா வழங்கும்.
கடந்த வருடம் 2016ல் ஹஜ் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,862,909 அதில் 1,325,372 வெளி நாட்டவரும், 537,537 சவுதி அரேபியாவைச் சார்ந்தவர்களும் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளை காட்டிலும் குறைவானதாகவே கருதப்படுகிறது.
புனித ஆலையத்தில் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பதுகாப்பு கருதியும், கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், ஹஜ் விசாவில் ஓதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வருங்காலங்களில் ஒதுக்கீடு முறையை (Quota) அதிகப்படுத்தி 5 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சவுதி அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் வெளிநாட்டு மக்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.