கீழை பதிப்பகத்தின் முதல் நூலான நூருத்தீன் எழுதிய “மொழிமின்” இன்று மாலை 05.00 மணியளவில் சென்னை 41வது புத்தக கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. இந்நூலை வெல்ஃபேர் பார்ட்டி தமிழ்நாடு மாநில தலைவர் சிக்கந்தர் வெளியிடுகிறார். இந்நூலின் முதல் பதிப்பை BAPASI செயற்குழு உறுப்பினர் K.ஜலாலுத்தீன் பெற்றுக்கொள்கிறார்.
இந்நிகழ்வு சென்னை 41வது கண்காட்சியில் உள்ள நிலவொளி பதிப்பகம் அரங்கு 13ல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கீழை பதிப்பகம் மற்றும் கீழை மீடியா மற்றும் அட்வர்டைஸ்மன்ட் நிறுவனத்தின் இயக்குனர் முஸம்மில் இபுராஹிம் முன்னிலை வகிக்கிறார்.
கீழை பதிப்பகம் நிர்வாகம் அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது.
You must be logged in to post a comment.