Home செய்திகள் வாகன உரிமையாளர்களே.. ஓட்டுநர்களே.. உங்களுக்கான விழிப்புணர்வு பதிவு..

வாகன உரிமையாளர்களே.. ஓட்டுநர்களே.. உங்களுக்கான விழிப்புணர்வு பதிவு..

by ஆசிரியர்

பொதுவாக வாகன உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் தங்களது வாகனங்களில் நறுமனத்திற்காக வாயு தன்மையுடைய தெளிப்பான்களை  (PERFUME SPRAY) வைத்திருப்பது வழக்கம். ஆனால் அதிகமான வெப்பத்தில் வானத்தின் உள்ளே வைத்தால் வெடித்து சிதறி வாகனமே சேதமாகும் என்பது இன்று (24/04/2019) மதுரை பைபாஸ் சாலையில் நடபெற்ற சம்பவமே உதாரணமாகும்.

இன்று (24/04/2019) மதிய வேளையில் தனியார் டயர் நிறுவனத்தில் வாகனம் ஒன்றிற்கு வேலையை முடித்துவிட்டு ஓரமாக நிறுத்தி வைத்துள்ளார். மதிய வெப்ப நேரமாக இருந்ததால், கண்ணாடியும் முழுமையாக மூடி இருந்ததால் திடீரென கார் கண்ணாடி வெடித்து சிதறி உள்ளே இருந்த பொருட்கள் பல அடி தூரம் சென்று விடழுந்துள்ளது.

பின்னர் அருகில் உள்ளவர்கள் பதறி அருகில் சென்று பார்த்த பொழுது வாகனத்தில் பின் இருக்கையில் இருந்த நறுமண ஸ்ப்ரே (PERUME SPRAY)  அதிகமான வெப்பத்தால் வெடித்து சிதறியுள்ளது. இச்சம்பவம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நடைபெற்றதால் உயிருக்கோ, உடமைக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால் இச்சம்பவம் ஆட்கள் சந்தடி உள்ள இடத்தில் நடந்து இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கலாம், சில நேரங்களில் வாகனமே தீப்பற்றி கொள்ளவும் வாய்ப்புள்ளது, ஆகவே வாகன ஓட்டுநர்களே கவனம் அவசியம், நீங்கள் வெயில் நேரத்தில் வானகத்தின் கண்ணாடிகளை வெளிக் காற்று உள்ளே செல்லும் அளவுக்கு திறந்து வைப்பது மிக நல்லதாகும்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!