Home செய்திகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு…

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு…

by ஆசிரியர்

அரசு பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி தர்மபுரி பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

தர்மபுரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் யோகேஷ்வரன் வயது 27 கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழகஅரசு பேருந்து மோதிய விபத்தில் பலியானார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயிரிழந்த வாலிபர் யோகேஷ்வரனின் குடும்பத்திற்கு ரூபாய் 36 லட்சம் இழப்பீடு வழங்க அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததால் நிறைவேற்று ஆணை வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்தனர்.

இதன் பேரில் அரசுத் தரப்பில் உத்திரவாதம் அளித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்காததால் தர்மபுரி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்தை ஜப்திச் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற வழக்கறிகர்கள் சண்முகம், பெரியசாமி முன்னிலையில் தர்மபுரி பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்தை சென்னைக் கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்தில் இருந்து ஜப்திச் செய்தனர்.

ஜப்திச் செய்யப்பட்ட அரசுப்பேருந்து நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்( பூதக்கண்ணாடி மாத இதழ்),கீழை நியூஸ்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com