Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாளர் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்கள் அவதி..

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாளர் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்கள் அவதி..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி சார்ந்து சித்தையன் கோட்டை சுற்றுப்புறத்தில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமப்புறத்தில் வாழும் விவசாயிகள்,வியாபாரிகள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் சம்பளம் பெறும் விவசாய கூலித் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

ஆனால், வங்கியில் பனியாளர்களோ மேலாளரையும் சேர்த்து நான்கு ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளதால் வங்கிக்கு பனிநிமித்தம் வரும் வாடிக்கையாளர்கள் சிறிய வேலைக்குகூட பலமணிநேரம் காத்திருக்கும் நிலைஉள்ளது. இதுபற்றி வங்கி மேலாளரிடம் வாடிக்கையாளர்கள் கேட்டால் பனிச்சுமையின் காரணமாக சிடுசிடுப்பாக பேசும் நிலை உள்ளது. ஆகவே, வங்கி சார்ந்த உயர் அதிகாரிகள் வாடிக்கையாளர்களின் நலன்கருதி சிரமத்தை போக்கும் வகையில் சித்தையன் கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு கூடுதல் பனியாளர்களை நியமனம் செய்து உதவிடுமாறு வாடிக்கையாளர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!