67
ராமநாதபுரத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுருத்தி வங்கியின் முன்பாக இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிட கோரி 23-24 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு, உதவி மேலாளர் பதவி உயர்வில் மூன்றுக்கு ஒன்று என அரசானையை ரத்து செய்ய வேண்டும். பல காலம் போராட்டம் மேற்கொண்டு பெற்ற சலுகைகளை இழக்க மாட்டோம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுருத்தி மாவட்டத்தலைவர் முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment.