தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் ஈட் ரைட் கிளப் மற்றும் நியூட்ரிஷியன் கிளப் இணைந்து சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் சிறுதானிய விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்து மாணவ, மாணவியர்களுடன் எடுத்துக் கொண்டு கையெழுத்து விழிப்புணர்வுப் பதாகையில் கையொப்பமிட்டார். சிறுதானிய அரங்குகளைப் பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் இணைந்து யோகாசனம் செய்தார். சிறுதானிய விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத் துறை) மரு.சசிதீபா, ஸ்ரீ பரமகல்யாணி கல்லுாரி முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம், தென்காசி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மகாராஜன், செல்வராஜ், முத்துராஜா, கிருஷ்ணன், டைட்டஸ் பெர்னாண்டோ, செல்லப்பாண்டி சங்கரலிங்கம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.