Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்க விட்டார் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி..

தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்க விட்டார் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்பிக் நிறுவனத்தின் பங்களிப்புடன் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சச பலூன் பறக்க விடப்பட்டது

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் / தேர்தல் அலுவலர் , சந்தீப் நந்தூரி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த தேர்தலின்போது வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ள வாக்குச்சாவடி மையங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும் இரவு நேரங்களிலும் ராட்சச பலூனில் உள்ள எல்.இ.டி. விளக்குகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் ராட்சச பலூன் பறக்கவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது அவர்களின் கடமை மற்றும் உரிமை என்பதை அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நமது மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறம் என பல்வேறு இடங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

எனவே வாக்காளர்கள் நடைபெறவுள்ள தேர்தலில் 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி ஆணையர் சரவணன், ஸ்பிக் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் அமிர்த கௌரி, ஸ்பிக் நிறுவனத்தின் துணை மேலாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் பிரின்ஸ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.  

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!