Home செய்திகள் நெல்லை அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு இலக்கிய சொற்பொழிவு..மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்..

நெல்லை அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு இலக்கிய சொற்பொழிவு..மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்..

by ஆசிரியர்

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் 14-வது கூட்டத்தினை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியார் சிவ. சத்தியவள்ளி தலைமையேற்று தொடங்கி வைத்தார். கவிஞர் சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘கலைஞர் யார்?’ எனும் தலைப்பில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தின் செயற்குழு உறுப்பினர் புன்னைச் செழியன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். சித்த மருத்துவக் கல்லூரி அமைச்சுப் பணியாளர் இருளப்பன் கோபாலகிருஷ்ணன், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியை பிரியதர்ஷினி வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார்.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கு கலைஞர் குறித்த கட்டுரை நூல் வழங்கப்பட்டது. முன்னதாக அன்புள்ள கலைஞர் கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கூட்ட ஒருங்கிணைப்பாளர்களாக கோ.கணபதி சுப்ரமணியன், ஜெயபாலன், பிரபு, சக்தி வேலாயுதம், அகிலன் முத்துக்குமார், வள்ளி சேர்மலிங்கம், பேராசிரியை பொன் சக்திகலா, ரம்யா மற்றும் ஜவகர்துரை, ஜனனி, யதுநந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com