ஆண்டிபட்டியில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என தற்கொலை.போலீசார் விசாரணை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டி யைச் சேர்ந்த பாண்டி (48) என்பவர் காண்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு மீனா (42) என்ற மனைவியும் ப்ளஸ் டூ முடித்த வெண்ணிலா(17) மகளும், 10 ஆம் வகுப்பு படித்து வந்த அபிசேக்கும் (15), ஒன்பதாவது படிக்கும் சாருகேஷ் (12 ) மகன்கள் இருந்தனர்.இதில் அபிசேக் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒரு வருடத்திற்கு முன்பு 9 ம் வகுப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார். இதனைத்தொடர்ந்து தற்போது 10ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளி நிர்வாகத்தினர் நடத்தும் 10ம் வகுப்பு ஆன்லைன் பாடங்களை வீட்டிலிருந்தபடியே படித்து வந்தார். ஆனால் ஆன்லைன் வகுப்பு பாடங்கள் சரியாக புரியவில்லை என, தனது பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பெற்றோர்கள் இயன்றளவு படிக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரிந்து கொள்ள முடியாத அபிஷேக் மனச்சோர்வினால் சாப்பிடாமல் இருந்தவாறே நேற்று முன்தினம் உறங்க சென்று விட்டாதாகவும் அதிகாலை சுமார் 04.30 மணிக்கு அபிசேக் வாந்தியும் வலிப்பும் ஏற்படவே,தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது பெற்றோர்கள் அனுமதித்தாக தெரிகிறது. ஆனால் பரிசோதித்த மருத்துவர் அபிஷேக் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் மன உளைச்சலில் இருந்த அபிஷேக் வீட்டில், பயிர்களுக்கு தெழிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து சாப்பிட்டதாக தெரியவந்தது.தகவல் அறிந்து அங்கு சென்ற ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மஹாராஜன் மாணவனை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்தார். மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

ஏற்கனவே கொரோனா தொற்றால் பொது மக்கள் செத்து மடிந்து வரும் சூழ்நிலையில், தற்போது தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவதாக கூறி பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி வருகிறது. வகுப்பில், வாத்தியார்கள் நடத்தும் பாடங்களை நன்றாகப் படிக்கும் மாணவர்களே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு தேவையா?மேலும் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு ஆன்லைன் வகுப்புகளை நிறுத்திவிட்டு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..