
டிஜிட்டல் இந்தியாவில் திரும்பும் இடம் எல்லாம் சுய விளம்பரம். ஆனால். ATM இயந்திரத்திற்கும் வேலை நேரம் உண்டோ என சிந்திக்கும் நிலையில் தான் உள்ளது.. அதாவது பல ATM எந்திரங்கள் இருந்தும் எதுவும் தேவையை நிவர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே உள்ளது கீழக்கரையில் அமைந்திருக்கும் அனைத்து வங்கிகளின் ATM இயந்திரங்களின் நிலையும்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் கீழக்கரை வாசிகளை குறி வைத்து பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து டெபாசிட் வாங்கி பதவி உயர்வு பெற்று வெளியூர் செல்வதில் காட்டும் அக்கறையை பொதுமக்களுக்கு சேவை செய்வதில் காட்டினால் கீழக்கரை பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.
இதுசம்பந்தமாக சமூக ஆர்வலர் ஜஹாங்கிர் அரூஸி இன்று (13/02/2021) அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை வேதைனையை கூறியதாவது’ “அவசரமான மருத்துவ தேவைக்காக ATM இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்ற பொழுது, அதிர்ச்சி தரும் வகையில் எந்த இயந்திரமும் வேலை செய்யவில்லை. முன்னனி வங்கிகள் கிளைகளில் நேரடியாக பணத்தை எடுக்க கட்டுப்பாடுகளை விதிப்பது மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தவும் அக்கறை காட்ட வேண்டும்”என வேதனையோடு கூறினார்.
இது இன்று மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல, ஆனால் தொடர் சம்பவம். கீழக்கரை மக்களிடம் டெபாசிட் மட்டும் பெற துடிக்கும் வங்கி அதிகாரிகள், பொதுமக்களின் தேவையை நிறைவேற்ற மனசு வைப்பார்களா?? அல்லது மீண்டும் செவிடன் காதில் ஊதிய சங்குதானா?..
You must be logged in to post a comment.