Home செய்திகள்உலக செய்திகள் இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா (Aryabhata) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட தினம் இன்று (ஏப்ரல் 19, 1975).

இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா (Aryabhata) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட தினம் இன்று (ஏப்ரல் 19, 1975).

by mohan

ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்மதிக்கு சூட்டப்பட்டது. ஆரியபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் யூனியன் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. இதன் எடை 360கிகி ஆகும். சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டியன்யார் ஏவுதளத்தில் இருந்து ஏப்ரல் 19, 1975ல் கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 619 கிமீ உயரத்தில் பறந்து வந்தது இந்த ஆரியபட்டா. எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது. செயற்கைகோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதி பழுதானதால், இந்த செயற்கைக் கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது. . ஆரியபட்டா இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது.

பிறகு 1979ஆம் ஆண்டு மீண்டும் ரஷ்யாவின் உதவியுடன் பாஸ்கரா என்ற செயற்கைக் கோளை அனுப்பியது. அதன்பிறகு 1980ல் இருந்து இந்தியா சுயமாக செயற்கைக் கோளை ஏவ ஆரம்பித்தது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகம ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969ல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்படுகிறது. இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இஸ்ரோவிற்கு கே. சிவன் தலைவராக உள்ளார். இஸ்ரோ உலக அளவில் சிறந்த 10 விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்துள்ளது.

நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை கண்காணித்தல், விண்வெளி ஆராய்ச்சி போன்ற பயன்பாடுகளுக்காக செயற்கைக்கோள்களை தயாரித்து இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. தன்னுடைய நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் வர்த்தக ரீதியாக இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்காக ‘ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் இஸ்ரோவின் வர்த்தக பிரிவாக செயல்படுகிறது.

இஸ்ரோ நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தும் பணியை இஸ்ரோ கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து செய்து வருகிறது. இதுவரை 319 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ தனது ராக்கெட்டின் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி உள்ளது. குறிப்பாக ஒரே ஆண்டில் அதாவது 2017ஆம் ஆண்டில் மட்டும் 19 நாடுகளைச் சேர்ந்த 130 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.

இதுவரை 48 PSLV ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 46 வெற்றியை தந்துள்ளன. மேலும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த அமெரிக்கா, ரஷ்யா போன்ற முன்னணி நாடுகளைக் காட்டிலும் இந்தியா குறைந்த கட்டணமே வசூலிக்கிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் மைக்ரோ மற்றும் நானோ செயற்கைக்கோள்கள் ஆகும். இவற்றை இஸ்ரோவின் பிரதான செயற்கைக்கோளுடன் சேர்த்து ஒரே ராக்கெட்டில் செலுத்தும்போது ராக்கெட்டின் உற்பத்தி செலவு குறையும், வருவாயும் கிடைக்கும்.

கடந்த ஆண்டுகளில் இஸ்ரோ இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி பிறநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் விண்வெளி/ செயற்கைக் கோள் தொடர்புடைய செயல்பாடுகளை ஆற்றி வருகிறது. தனது ஏவுகலங்களையும் ஏவுமிடங்களையும் தனது செயற்கைக்கோள் ஏவுதிறனுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. புவியியைவு செயற்கைக் கோள் ஏவுகலத்தை (ஜி.எஸ்.எல்.வி) மேம்படுத்தி முழுமையும் இந்தியப் பொருட்களால் கட்டமைப்பதும் மனிதரியக்கு விண்வெளித் திட்டங்கள், மேலும் பல நிலவு புத்தாய்வுகள் மற்றும் கோளிடை ஆய்வுக்கருவிகள் செயல்படுத்துவதையும் எதிர்காலத் திட்டங்களாகக் கொண்டுள்ளது. தனது பல்வேறு பணிகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குவியப்படுத்திய மையங்களை நாடெங்கும் கொண்டுள்ளது. பன்னாட்டு விண்வெளிச் சமூகத்துடன் பல இருவழி மற்றும் பல்வழி உடன்பாடுகளைக் கண்டு கூட்டுறவாகச் செயல்படுகிறது.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com