அரசால் தடைசெய்யப்பட்ட 6370 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர் கைது…

மதுரை மாநகர் B3 தெப்பக்குளம் ச&ஒ சார்பு ஆய்வாளர் திரு. ஆறுமுகம் ரோந்து பணியில் இருந்த போது மதுரை முனிச்சாலை கொள்ளம்பட்டரையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் 33/19, த/பெ. சுப்பிரமணி என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட 6370 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 6370 புகையிலை (TOBACCO) பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு பன்னீர்செல்வத்தை நேற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்