Home செய்திகள் வாணியம்பாடி அருகே சர்வதேச விமான நிலையம்.. சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்…

வாணியம்பாடி அருகே சர்வதேச விமான நிலையம்.. சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்…

by ஆசிரியர்

வாணியம்பாடி அருகே இன்டர்நேஷனல் ஏர்போர்ட். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது விஜிலாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை சர்வதேச விமான நிலையம் அமைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் தெலுங்கு தேச கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் அவரது சொந்த தொகுதியான குப்பம் பகுதிக்கு வருகை வந்த அவர் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச விமான நிலையத்துக்கான அடிக்கல் நாட்டினார். இந்த இடம் ஆந்திர மாநில எல்லைக்கு உட்பட்டிருந்தாலும் தமிழக மக்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும். அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு பயன்பெற நல்ல வாய்ப்பாக அமையும்.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com