55
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தமிழக அரசின் காசநோய் துறை மற்றும்எய்ட்ஸ் விழிப்புணர்வு மையம் இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, பால்வினை நோய் மற்றும் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் ஆகிய கொடிய நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, திருமண அழைப்பிதழ் போன்று மஞ்சள் நிற வடிவில் அச்சடித்து, அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு நேரில் சென்று அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர்.திருமங்கலத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பொதுமக்களுக்கு இந்நோயில் இருந்து விடுபடுவதற்கும், நோய் தாக்கும் அறிகுறிகள் குறித்தும் விளக்கினர்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.