Home செய்திகள் கும்பரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் பயிற்சி முகாம் 

கும்பரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் பயிற்சி முகாம் 

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கும்பரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட  2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ்  வேளாண் முன்னேற்றக் குழு காரீப்பருவ  பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ் விலை ஆதரவுத் திட்டத்தின் (Price Support Scheme)கீழ்  கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் கொள்முதல்  செய்யப்படும் விளை பொருட்களுக்கு உரிய தொகையானது இடைத்தரகு ஏதும் இன்றி கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கிகணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவருகிறது. மேலும் மின்னணு தேசிய வேளாண் சந்நை திட்டம் (e-NAM),குளிர்பதன கிட்டங்கியில் விளைபொருட்கள்  இருப்பு வைத்திட வாடகை விபரம், பொருளீட்டுக்கடன் தொடர்பான திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.பயறு வகை விதைப் பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில், உற்பத்தி  மானியம் வழங்கப்படுகிறது. விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் எனத் உதவி விதை அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார். கிராம வேளாண் முன்னேற்றக் குழுவின் நோக்கம் பயன்கள்,மற்றும் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்  நடப்பாண்டு மானியத்தில் பசுந்தாள் உர விதைகள், பண்ணை கருவிகள், தார்ப்பாலின் அடங்கிய தொகுப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி கூறினார். மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து உதவி வேளாண் அலுவலர் முகமது யூசுப் விவசாயிகள் இடையே விளக்கி பேசினார், தொடர்ந்து விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டது. கும்பரம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கும்பரம் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.. பயிற்சி முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் நன்றியுரை கூறினார் . 

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!