Home செய்திகள் தேனி பள்ளி மாணவன் மாநில குத்து சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை…

தேனி பள்ளி மாணவன் மாநில குத்து சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை…

by ஆசிரியர்

தேனி மாவட்டம் வெங்கிடஜலபுரம் சவளபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் வரதவெங்கடரமண மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கத்தின் சார்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் ஸ்ரீவரதவெங்கடரமண மேல்நிலைப்பள்ளி பள்ளியின் சார்பாக ஒன்பது மாணவா்கள் கலந்து கொண்டதில் ஒரு தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் ஒன்பது பதக்கங்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளான். இவர்களில் தங்கம் வென்ற சூர்யகுமார் என்ற மாணவன் “தேசியஅளவிலான” போட்டிக்கு தகுதி பெற்றுள்ளான்.

இப்பள்ளியிலிருந்து தேசிய அளவிலான போட்டிக்குச் செல்லும் முதல் மாணவன் என்பதில் பள்ளிக்கு பெருமை. இவா்களுக்கு குத்துச்சண்டை பங்கேற்க போட்டிற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி ஊக்கப்படுத்திய அப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் P.M.R. ராதாகிருஷ்ணன், A. சீனிவாசன் மற்றும் நாகலாபுரம் கிட்டு சேவு உாிமையாளா் காளீஸ்வர மருது ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்தனார்.போட்டியில் பங்கேற்க இவர்களுக்கு சிறந்த பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், அலுவலக நண்பா்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் ஊக்கப்படுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றியினைத் பள்ளி தலைமையாசிரியர் தினகரன் அவர்கள் மாணவ மாணவிகள் சார்பாகவும் தொிவித்து கொண்டார்.

செய்தி:- பால் பாண்டி, தேனி

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com