மதுரை மாவட்டம் பேரையூர் அருகே டி. மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வீரனன் மகன் கிருஸ்;ணன்(35). மாற்றுத்திறனாளி ஆன இவர் டிராக்டர் டிரைவராகவும் உள்ளார்.கடந்த வாரமாக பேரையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் மழை பெய்துள்ளதால் மானாவாரி விவசாய நிலங்களை உழும் பணி நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் குப்பம் நத்தத்தில் விவசாய நிலத்தில் மானாவாரி விதைப்புக்காக உழுது கொண்டிருந்த போது டிராக்டர் கலப்பை மண்ணில் சிக்கிக்கொண்டது.இதனை கிருஸ்ணன் இறங்கி சரி செய்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் இயங்கியதால் கலப்பையில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் இவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.