Home செய்திகள்உலக செய்திகள் நேரு நினைவுக் கல்லூரி, கணினி அறிவியல் சி++ புரோகிராமிங்கில் தேசிய அளவிலான மின்-வினாடி வினா அறிக்கை.

நேரு நினைவுக் கல்லூரி, கணினி அறிவியல் சி++ புரோகிராமிங்கில் தேசிய அளவிலான மின்-வினாடி வினா அறிக்கை.

by mohan

நேரு நினைவு கல்லூரியின் கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை “C++ புரோகிராமிங்” குறித்த ஆன்லைன் மின்-வினாடி வினாவை 18-05-2022 முதல் 25-05-2022 வரை Code Venture கிளப்பின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்தது. Code Venture கிளப்பானது மாணவர்களின் நிரலாக்கம் திறன்களை மேம்படுத்துவதற்கான உருவாக்கபட்டது. UG/PG மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், விரிவுரையாளர்கள், புரோகிராமர்கள், உதவி மற்றும் இணைப் பேராசிரியர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். 60 கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / பள்ளிகளில் இருந்து சுமார் 835 பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சான்றிதழ்களை வென்றனர். பங்கேற்பாளர்களுக்கு அடிப்படை, இடைநிலை மற்றும் கடினமான நிலைகளுடன் கூடிய இருபத்தைந்து கேள்விகள் கேட்கபட்டது. மின் வினாடி வினாவின் செயல்திறன் சராசரியாக 55.94 / 80 புள்ளிகளை பெற்றுள்ளது. மின்-வினாடி வினாக்களுக்கான பதில்கள் 26-05-2022 அன்று வெளியிடப்பட்டன, அவை மின்னஞ்சல் மூலம் தனிநபர்களுக்கு அனுப்பப்படும். 18-05-2022 அன்று காலை 5.30 மணியளவில் கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர். திரு. முரளிதரன் அவர்களால் இந்த நிகழ்வு தொடங்கி வைக்கபட்டது. முனைவர் ப.கல்பனா, இணைப் பேராசிரியை, கணினி அறிவியல் துறை, ஒருங்கிணைப்பாளராகவும், திரு எஸ்.விக்னேஷ் (2K19CS173) மாணவர் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். பொறியாளர்.பொன்.பாலசுப்ரமணியன் கல்லூரி தலைவர், திரு.பொன்.ரவிச்சந்திரன் கல்லூரி செயலாளர், முனைவர். A.R.பொன்பெரியசாமி கல்லூரி முதல்வர், முனைவர்.M.மீனாட்சி சுந்தரம் ஒருங்கிணைப்பாளர் (சுயநிதி பிரிவு) ஆகியோர் நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு உத்வேகமாகவும், ஆதரவாகவும் இருந்தனர்.தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!