பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக சாத்தையாறு அணை உயர்த்துவதை அமைச்சர் துரைமுருகன். கைவிட்டதாக அமைச்சர் மூர்த்தி பேச்சு.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, மேட்டுப்பட்டியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேசும்போது ,கடந்த 1996 முதல் 2001 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனை அழைத்து வந்து சாத்தையாறு அணையை உயர்த்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால், அருகில் இருந்த கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவை கைவிட்டு விட்டோம் .அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சராக துரை முருகனை, வைத்துகூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது, சாத்தியார் அணையின் அருகில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் திமுதிமுவென அமைச்சர் துரைமுருகனை நோக்கி வந்ததால் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்து விட்டு சென்று விட்டார். அதனால் ,இந்தப் பகுதி இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளது. இந்த முறை கண்டிப்பாக சாத்தையாறு அணை உயர்த்தப்பட்டு பெரியார் கால்வாயில் இருந்து நீரை கொண்டுவந்து இந்தப் பகுதியை செழிப்படைய முயற்சி எடுப்பேன் என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..