நெல்லையில் மகளிர் சுயதொழில் பயிற்சி வகுப்பு..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான சுய தொழில் பயிற்சி வகுப்பு நடந்தது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நெல்லை அரசு அருங்காட்சியகமும், திருநெல்வேலி வேஸ்ட் ரோட்டரி கழகமும் இணைந்து மகளிர் இலவச மகளிர் சுய தொழில் பயிற்சி வகுப்புகள் 24.05.2022 செவ்வாய் கிழமை துவங்கியது. நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி வேஸ்ட் ரோட்டரி கழகத்தின் தலைவர் இசக்கி, செயலர் நிர்மலாதேவி ஆகியோர் செய்திருந்தனர். இதில் நடைபெற்ற பயிற்சியில் பயிற்சியாளர் விஜயா வீட்டில் இருந்தபடி முல்தானி மெட்டி கொண்டு சோப்பு தயாரிக்கும் பயிற்சி வகுப்பினை நடத்தினார்.

நெல்லை மாவட்டத்தை சார்ந்த 25 பெண்மணிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு சோப்பு தயாரித்தனர். பெண்கள் வீட்டில் இருந்தபடி சுய தொழில் செய்வது தொடர்பான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். முன்னதாக நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தற்காப்பு கலை டேக்வாண்டோ பயிற்சி நடத்தப்பட்டது. இப் பயிற்சியினை டேக்வாண்டோ பயிற்றுவிப்பாளர் சுடலை சுரேஷ் நடத்தினார். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..